மனைவியை நண்பர்கள் முன் ஆபாச நடனம் ஆட வைத்த கணவர்! அடுத்து நடந்த விபரீதம்

Report Print Vijay Amburore in இந்தியா

நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வற்புறுத்தி கணவன் தொல்லை கொடுத்ததால் மனமுடைந்த மனைவி ஐதராபாத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத் மாநிலம் Kakatiya Nagar பகுதியை சேர்ந்தவர் வெள்ளப்பா மாதுரி (27). இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஹனுமானந்தா ராவ் என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று ஐதராபாத் திரும்பிய மாதுரி, நேரடியாக வீட்டிற்கு சென்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்த போனார்.

இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், ராவ் விடுமுறையின் போது தன்னுடைய நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்து மது ஊற்றி கொடுத்துள்ளார்.

மேலும் அவர்களின் கண்முன் மனைவியை நிர்வாணமாக நடமாட வற்புறுத்தி கொடுமைப்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

தற்போது இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிரமான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்