கணவனை கொலை செய்த மனைவி: விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் காதலுடன் சேர்ந்து வாழ்வதற்காக கணவனை மனைவி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவின் ஹாலியா பகுதியைச் சேர்ந்த தம்பதி தாரா ஸ்ரீனியா-வானி. இந்த தம்பதி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தான் இப்பகுதிக்கு வந்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இவர்கள் இருக்கும் வீட்டிற்கு அருகில் இருப்பவர் தான் வெங்கட்டா ரெட்டி. இவர் அங்கு ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

ஸ்ரீனியா லாரி டிரைவர் என்பதால் அடிக்கடி வெளியில் சென்றுவிடுவார். இதனால் வெங்கட்டா ரெட்டிக்கும், வானிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

முதலில் நண்பர்களாக இருந்த இவர்கள் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு இருந்துள்ளனர். இந்த விவகாரம் ஸ்ரீனியாவுக்கு தெரியவர அவர் மனைவி வானியை கண்டித்துள்ளார்.

இருப்பினும் வெங்கட்டா ரெட்டியுடன் கொண்ட உறவை விடமுடியாத காரணத்தினால் கணவனை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

இதற்கு வெங்கட்டா ரெட்டியின் உதவியை நாடியுள்ளார். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 17-ஆம் திகதி வெங்கட்டா ரெட்டி, உடன் இரண்டு பேரை அழைத்து வந்துள்ளார். அவர்கள் உதவியுடன் ஸ்ரீனியாவை கழுத்தை நெரித்தும், அடித்தும் கொலை செய்துள்ளனர்.

அதன் பின் அருகில் இருக்கும் வங்கி அருகே அவரின் உடலை வீசியுள்ளனர். இதைத் தொடர்ந்து பொலிசார் மேற்கொண்டு வந்த விசாரணையில் வெங்கட்டா ரெட்டி மீது பொலிசாருக்கு சந்தேகம் வந்துள்ளது.

வானி மற்றும் இவரிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்ததை ஒத்துக் கொண்டதால், வெங்கட்டா ரெட்டி மற்றும் வானியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்