தேவாலயங்களில் தான் அதிகமான பாலியல் குற்றங்கள் நடக்கின்றது? சின்மயி சர்ச்சை பேட்டி

Report Print Vijay Amburore in இந்தியா

பிரபல பாடகியான சின்மயி தேவாலயங்களில் தான் அதிகமாக பாலியல் குற்றங்கள் நடக்கிறது என கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

பிரபல பாடகியான சின்மயி சமீபத்திய நாட்களாகவே பல்வேறு பிரபலங்கள் மீது தொடர்ச்சியான பாலியல் புகார்கள் பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகிறார்.

அதில் கவிஞர் வைரமுத்து மீது கூறிய புகார் பெரும் சர்ச்சையானதை அடுத்து, பல்வேறு ஊடகங்களும் அவரை நேர்காணலுக்கு அழைத்து பேட்டி எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தனியார் தமிழ் ஊடகம் ஒன்று எடுத்துள்ள பேட்டியில், தொழில் மேல் பக்தியுடன் இருக்கும் கர்நாடக கலைஞர்கள் கூட, தங்களிடம் பயிலும் சீடர்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவது குறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்துள்ள சின்மயி, எங்கெல்லாம் மதம் சம்மந்தமாக, பக்தி அதிகமாக இருக்கின்றதோ அங்கு தான் நிறைய பாலியல் குற்றங்கள் நடக்கிறது. அதிலும் தேவாலயங்களில் இருந்து தான் அதிகமான பாலியல் குற்றங்கள் வெளிவருகின்றன என கூறியுள்ளார்.

தேவாலயங்களை மட்டும் சின்மயி குறிப்பிட்டு கூறியுள்ள கருத்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்