அங்கங்களை வர்ணித்த வைரமுத்து: இளம்பெண் வெளியிட்ட பரபரப்பான ஆடியோ

Report Print Vijay Amburore in இந்தியா

பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து மீது அடுக்கடுக்காக குவிக்கப்பட்டு வரும் பாலியல் குற்றச்சாட்டுக்கு நடுவில் பெண் ஒருவர் ஆடியோ ஒன்றினை வெளியிட்டு மேலும் பரபரப்பினை கிளப்பியுள்ளார்.

சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் பெண்கள் அனைவரும், பல்வேறு பிரபலங்களால் தாங்கள் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து #metoo என்னும் ஹாஸ்டேக் மூலம் தெரிவித்து வருகின்றார்.

இந்த ஹேஸ்டேக் கடந்த சில நாட்களகாவே தமிழகத்தையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இதில் முக்கியமாக பாடகி சின்மயி உள்ளிட்ட சில பெண்களால் குற்றம்சாட்டப்பட்ட கவிஞர் வைரமுத்து பற்றிய தகவல்கள் நாளுக்குநாள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பெண் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஆடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் பேச ஆரம்பிக்கும்போதே, என்னுடைய குரலை கேட்டாலே நான் யார் என்பது உங்களுக்கு தெரிந்துவிடும் என கூறி, தன்னுடைய தோழிக்கு வைரமுத்துவால் நடந்த துன்புறுத்தல் குறித்து விவரித்துள்ளார்.

மேலும் இதற்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்தால், ஆதாரங்களை சமர்ப்பிக்கவும் தயார் என சவால் விட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்