நள்ளிரவில் நடிகை ரேவதியிடம் காப்பாற்ற கெஞ்சிய 17 வயது நடிகை விவகாரம்: அதிரடி திருப்பம்

Report Print Raju Raju in இந்தியா

17 வயது நடிகை தன்னை பாலியல் தொல்லையிலிருந்து காப்பாற்றுமாறு கதறியதாக நடிகை ரேவதி பேட்டி அளித்த நிலையில் இந்த சம்பவத்தை மூடி மறைத்த ரேவதி மீது பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மீ டூ ஹேஷ்டேக் மூலம் திரைத்துறை, அலுவலகம் என பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் நடிகைகள் ரேவதி, பத்மபிரியா, பார்வதி, ரீமா கல்லிங்கல் உள்ளிட்டோர் கொச்சியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது பேசிய ரேவதி, சில ஆண்டுகளுக்கு முன் இரவில் 17 வயது மதிக்கத்தக்க இளம் நடிகை ஒருவர் என் அறை கதவை தட்டினார். நான் கதவை திறந்த போது அக்கா என்னை காப்பாற்றுங்கள் என்று உதவி கேட்டு அழுதார். இது போன்று பல சம்பவங்கள் சினிமாவில் நடந்து வருவது வேதனையளிக்கிறது என்றார்.

இந்நிலையில், கொச்சியை சேர்ந்த சியாஸ் ஜமால் என்பவர் பொலிசில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில், 17 வயது நடிகையை பலாத்காரம் செய்ய யாரோ முயற்சித்ததாக ரேவதி கூறியுள்ளார். அவர் யார் என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்த வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய ரேவதி, 17 வயது நடிகை நள்ளிரவில் கதவை தட்டினார் என்றுதான் சொன்னேன். மற்றபடி பலாத்கார முயற்சி நடந்தது என்று நான் கூறவில்லை. பெண்களுக்கு தொழில்புரியும் இடத்தில் பாதுகாப்பு இருக்க வேண்டும் என்பதற்காக இந்த தகவலை தெரிவித்தேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்