சின்மயி-வைரமுத்து பிரச்சனை! ஆவேசமாக கேள்வி எழுப்பிய பாரதிராஜா: செய்தியாளர்கள் சந்திப்பு வீடியோ

Report Print Santhan in இந்தியா

பிரபல இயக்குனரான பாரதிராஜா MEE Too பற்றி கேள்வி கேட்கப்படுவதற்கெல்லாம் தன்னால் பதில் சொல்லமுடியாது என்றும், தன்னைப் பற்றி மட்டுமே எதுவாக இருந்தால் கேளுங்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

பாடகியான சின்மயி சமீபத்தில் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதற்கு சமூகவலைத்தளங்களில் சின்மயிக்கு ஆதரவுகள் குவிந்து வருகின்றது.

அதுமட்டுமின்றி திரைப்பிரபலங்கள் பலரும் சின்மயிக்கு ஆதரவாக உள்ளனர்.

இந்நிலையில் பிரபல இயக்குனரான பாரதிராஜா இன்று இலங்கையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ME TOO பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் மன்னிக்க வேண்டும், என்னைப் பற்றி எதுவாக இருந்தாலும் கேளுங்கள் என்று கூறினார்.

ME TOO என்றால் என்ன என்றார்? மேலும் திரையுலகில் பாலியல் தொந்தரவு குறித்து கேட்ட போது நீங்கள் பார்த்தீர்களா? கேள்விதான் பட்டிருக்கிறீர்கள், ஆதாரம் இருந்தால் கூறுங்கள், நான் அதற்கு பதில் கூறுகிறேன் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி வைரமுத்து-சின்மயி பிரச்சனை என்று கேட்ட போது, என்ன பிரச்சனை என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்