குடித்துவிட்டு சின்மயியின் அம்மா செய்த மோசமான காரியம்: அம்பலமான தகவல்

Report Print Deepthi Deepthi in இந்தியா

2005 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்துக்கு இசை நிகழ்ச்சிக்காக சின்மயி, வைரமுத்து உட்பட அனைவரையும் அழைத்து சென்ற இனியவன் என்பவர், வைரமுத்து மீது சின்மயி கூறியுள்ள பாலியல் குற்றச்சாட்டு பொய்யானது என கூறியுள்ளார்.

மேலும், சின்மயின் அம்மா சுவிட்சர்லாந்தில் ஒயின் குடித்துவிட்டு போட்ட ஆட்டத்தால் தாங்கள் பிரச்சனை எதிர்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

சின்மயிக்கு சுவிட்சர்லாந்தில் கொடுக்கப்பட்ட பணம் குறைவாக இருந்ததாக, இருவரும் பயங்கரமாக எங்களுடன் சண்டை போட்டார்கள். அது வெளியில் சொல்லமுடியாது.

பணத்தை வைத்தே ஆக வேண்டும் என்று இருவரும் பிரச்சனை செய்தனர். வேறு வழியில்லாமல் அவர்கள் கேட்ட தொகையை கொடுக்க வேண்டியதானது.

சின்மயிக்கு பின்னணியில் ஏதோ ஒன்று இருக்கிறது. அதனால் தான் அவர் இப்படி செய்கிறார். வைரமுத்துவின் நகத்தை கூட இவர்களால் தொடமுடியாது. அவர் தமிழ் மொழியின் அடையாளம்.

இந்த பிரச்சனை தொடர்பாக இலங்கை தமிழர்கள் பலர் என்னிடம் தொடர்பு கொண்டு இதுகுறித்து விசாரித்து வேதனையடைந்தார்கள்.

அவர்களை நான் சுவிட்சர்லாந்துக்கு அழைத்து சென்றபோது, இப்படியொரு பிரச்சனையை அவர்க எதிர்கொண்டார்கள் என்றால், என்னிடம் அப்போதே தெரிவித்திருக்கலாம். நான் இதுகுறித்து விசாரித்திருப்பேன்.

சின்மயின் அம்மா ஒயின் குடித்துவிட்டு பயங்கரமாக சண்டைபோட்டார். இவரை அட்டூழியத்தை பார்த்து சுரேஷின் மனைவி வேதனையடைந்தார். அருகில் உள்ளவர்களால் பிரச்சனை வந்துவிடும் என்று அவர்கள் பயந்தார்கள்.

சின்மயின் பிரச்சனையை காலில் இருக்கும் செருப்பாக அவர் நினைத்துக்கொண்டிருக்கிறார் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்