சின்மயியின் உள்நோக்கம் இதுதான்! தொடர்ந்து குரல் கொடுக்கும் சீமான்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கவிஞர் வைரமுத்து மீது கூறப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்துகொண்டு பேசியதாவது,

சகோதரி சின்மயி அவர்கள் பிராமணச் சங்கத்தலைவர் ஐயா நாராயணன் மீதும் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்கள். அதுகுறித்து எவரும் இங்கும் பேசுவதில்லை.

எல்லாக் குரல்களும், விரல்களும் வைரமுத்துவை நோக்கி மட்டுமே நீள்கிறதே காரணமென்ன? இதனால்தான், நாங்கள் இதனைப் பேச வேண்டியிருக்கிறது. #MeToo அமைப்பு மூலம் யார் வேண்டுமானாலும் யாரையும் குற்றஞ்சாட்டி, பெயரைக் களங்கப்படுத்திவிடக்கூடிய ஒரு வாய்ப்பியிருக்கிறது.

நாளை குற்றஞ்சாட்டப்பட்டவர் தன்னை குற்றமற்றவர் என நிரூபிக்கலாம். அதற்குள்ளாக எல்லோரும் இதனை விவாதித்து அவருக்கு பெரும் அவமானத்தைக் கொடுத்துவிடுவார்கள் என்பது இதிலிருக்கும் பெரும் சிக்கல்.

இவ்விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை என சட்ட அறிஞர்கள் கூறுகிறார்கள் என்கிறார் சகோதரி சின்மயி. அப்படியானால், இதனைப் பதிவிடுவதன் மூலம் எதனைச் சாதிக்க நினைக்கிறார்? அவரது உள்நோக்கம் வைரமுத்துவை இழிவுப்படுத்தலாம் என்பதைத்தாண்டி வேறென்ன?

15 ஆண்டுகளாக வைரமுத்து மீதானக் குற்றஞ்சாட்டை முன்வைக்காததற்கு, அவருக்கிருந்த அரசியல் செல்வாக்குதான் காரணம் என்கிறார். இப்போது வைரமுத்துவை எதிர்க்கிற அளவுக்கு தனக்கு அரசியல் செல்வாக்கு வந்துவிட்டது எனக் கூறவருகிறாரா? முன்பைவிட வைரமுத்துவுக்கு இப்போதுதானே செல்வாக்கு கூடியிருக்கிறது.

வைரமுத்துவை வெறுமனே பாடலாசிரியர், கவிஞர் என்று சுருக்கிவிட முடியாது. அவர் தமிழினத்தின் ஓர் அடையாளம். அதனைச் சிதைத்து அழித்து இழிவுப்படுத்த எண்ணுவதை ஏற்க முடியாது. தமிழர்களுக்கு இருக்கும் பெருமைகள், அடையாளங்களையெல்லாம் திட்டமிட்டு அசிங்கப்படுத்தி ஒன்றுமில்லாமலாக்குவதை இனியும் ஏற்கமுடியாது.

பெண்களைக் காக்க வேண்டும் என்பதிலும், பெண்ணிய உரிமைகளுக்காக நிற்க வேண்டும் என்பதிலும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்