வேறொரு நபருடன் தனிமையில் இருந்த காதலி: ஆத்திரத்தில் காதலன் செய்த திடுக்கிடும் செயல்

Report Print Santhan in இந்தியா
193Shares

தமிழகத்தில் காதலி தன்னுடன் உறவை முறித்துக் கொண்டு வேறுநபருடன் சுற்றியதால், ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் அவரை பல முறை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒசூரின் பெலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இவருக்கும் அருகிலிருக்கும் சூடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்ற ஆட்டோ ஓட்டுனருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.

இதையடுத்து பாகலூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்ற நபரோடு மஞ்சுளாவிற்கு நெருக்கம் ஏற்பட்டதால், மஞ்சுளா ராஜாவுடனான கள்ளக்காதலை முறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

மஞ்சுளா தன்னை விட்டு வேறொரு ஆணுடன் சுற்றுவதை அறிந்த ராஜா கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

அப்போது பெலத்தூரில் இருக்கும் தைல மரத்தோட்டத்தில் சுரேஷும், மஞ்சுளாவும் தனியாக இருப்பது ராஜேசுக்கு தெரியவந்துள்ளது.

இதனால் கையில் கத்தியுடன் ராஜா அங்கு சென்றதால், சுரேஷ் அதைக் கண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். மஞ்சுளா ஓட முயன்ற போது அவரின் கையை பிடித்து கத்தியால் அவரை பல முறை குத்தியுள்ளார்.

இருப்பினும் ஆத்திரம் தீராததால், மஞ்சுளாவின் கழுத்தை அறுத்துவிட்டு சென்றுள்ளார். மஞ்சுளாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தை அறிந்த பொலிசார் ராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்