வைரமுத்துவுக்கு என்ன பிரச்சனை? மருத்துவமனையிலிருந்து வெளியான தகவல்

Report Print Raju Raju in இந்தியா

மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கவிஞர் வைரமுத்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறியுள்ள பாலியல் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து தன் மீது குற்றம் சுமத்துபவர்கள் வழக்கு தொடரலாம் என வைரமுத்து கூறினார்.

இந்நிலையில் ரத்த அழுத்தம் சீராக இல்லாததாலும், உணவு ஒவ்வாமை பிரச்சனையாலும் அவதிப்பட்ட வைரமுத்து மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து இன்று சனிக்கிழமை வைரமுத்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்