ஒரே வீட்டில் 12 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த தம்பதியினர்: கணவனால் மனைவிக்கு நேர்ந்த சோகம்

Report Print Vijay Amburore in இந்தியா

ஈரோடு மாவட்டத்தில் விவாகரத்து கொடுக்க மறுத்த மனைவியை உருட்டு கட்டையால் கணவனும், மாமியாரும் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது.

சிவகிரி அருகே உள்ள காட்டூரை சேர்ந்த தமிழ்மணி (45) என்பவருக்கும், கொடுமுடி கருத்திபாளையத்தை சேர்ந்த ஜோதிமணி (35) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்றுள்ளது.

ஜோதிமணி மின்வாரியத்தில் அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார். திருமணம் முடிந்து ஒரு ஆண்டு மட்டுமே இருவரும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். அதன் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ஒரே வீட்டில் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இதனால் விவாகரத்து கேட்டு தமிழ்மணி மனுதாக்கல் செய்துள்ளார். ஆனால் ஜோதிமணி விவாகரத்து கொடுக்க மறுத்து வந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக வார்த்தை மோதல் நடைபெற்று வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்றும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது ஆத்திரமடைந்த தமிழ்மணி, தன்னுடைய தாய் பழனியம்மாள் (65) மற்றும் நண்பன் லோகநாதனுடன் சேர்ந்து உருட்டு கட்டையால் ஜோதிமணியை தாக்கியுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே ஜோதிமணி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து மூவரும் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டனர்.

தற்போது இந்த சமத்துவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மூவரையும் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers