ஐயப்ப ஆடையில் ஆபாச புகைப்படம்: யார் இந்த ரெஹானா பாத்திமா?

Report Print Fathima Fathima in இந்தியா

ரெஹானா பாத்திமா சபரிமலைக்கு பயணம் மேற்கொண்டு பரபரப்பை எகிற வைத்தார், அதுவும் பட்டையுடன் ஐயப்ப ஆடை அணிந்து ஆபாசமாக எடுக்கப்பட்ட அவரது புகைப்படம் வைரலானது.

இந்நிலையில் யார் அவர்? என்ற கேள்விகளும் எழாமல் இல்லை, பெயரில் மதம் இருந்தாலும் மதத்தை தாண்டிய செயல்பாடுகளிலேயே அதிகம் ஈடுபட்டிருந்தது தெரியவருகிறது.

குறிப்பாக இந்து மதத்துக்கு மாறி விட்டதாகவும், ஆர்எஸ்எஸ்-வுடன் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதிலும் முக்கியமாக கல்லூரிப் போராசிரியருக்கு எதிரான போராட்டம்,

கோழிக்கோட்டில் உள்ள பரூக் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி பேராசிரியர் ஒருவர் கடந்த மார்ச் மாதம் மாணவிகளும், பெண்களும் தங்களது மார்புகளை முழுமையாக மறைக்கும்படி டிரஸ் அணிவதில்லை.

ஏதோ பழக் கடையில் தர்பூசணிகளை பார்வைக்கு வைப்பது போல வெளிக்காட்டியபடி வருகிறார்கள் என்று ஆபாசமாக பேசியிருந்தார். இதற்கு ரெஹனாவும் அவரது தோழிகளும் கொடுத்த பதிலடியால் பரபரப்பு ஏற்பட்டது.

ரெஹனாவும் அவரது தோழிகள் தியா சேனா, ஆர்த்தி ஆகியோர் தர்பூசணிகளை வெட்டி அதை தங்களது நிர்வாண மார்புகளுக்கு முன்பு வைத்து மறைத்தபடி போஸ் கொடுத்து போட்டோ எடுத்து அதை பேஸ்புக்கில் போட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த நூதனப் போராட்டம் கேரளாவில் பெரும் பரபரப்பையும், புயலையும் கிளப்பியது.

இதேபோன்று கேரளாவில் நடந்த முத்தப் போராட்டம், ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவான போராட்டத்திலும் கலந்து கொண்டிருக்கிறார்.

ஓனம் பண்டிகையின் போது ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் புலி ஆட்டத்திலும் கலந்து கொண்டி அதிரடி காட்டினார்.

31 வயதாகும் ரெஹானாவுக்கு இரு குழந்தைகள் இருப்பதாகவும், அரசுப் பணியில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...