ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட நபர்: ஐஸ்வர்யாவால் வசமாக சிக்கிய சரத்குமார்

Report Print Raju Raju in இந்தியா

திண்டுக்கல்லில் கணவனை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டிய கள்ளக்காதலனும், மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் ராஜதானிக் கோட்டையைச் சேர்ந்தவர் வடிவரசு (வயது 36), இவரது மனைவி ஐஸ்வர்யா(வயது 30), இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள்.

கடந்த நான்கு ஆண்களுக்கு முன் கணவருடன் ஏற்பட்ட தகராறால், ஐஸ்வர்யா அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

அருகில் இருக்கும் தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த ஐஸ்வர்யாவுக்கும், சரத்குமார் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது.

இதை அறிந்து கொண்ட வடிவரசு, மாமனார் வீட்டுக்கு வந்து ஐஸ்வர்யாவை கண்டித்துள்ளார், ஆனாலும் அவர்கள் நெருங்கி பழகியதால் போனில் திட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஐஸ்வர்யா, வடிவரசுவை தீர்த்துக் கட்டச் சொல்லி சரத்குமாருக்கு தெரிவித்துள்ளார்.

இதன்படி வடிவரசுவிடம் போனில் பேசிய சரத்குமார், சாதிக் கவுண்டன் பட்டியில் இருக்கும் ஒரு இடத்துக்கு அழைத்து சென்று மது அருந்தியுள்ளனர்.

போதை தலைக்கேறியதும், மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு வடிவரசுவின் கழுத்தை அறுத்துள்ளார்.

வடிவரசுவின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவர சரத்குமார் தப்பி ஓடியுள்ளார், வடிவரசுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய அம்மையநாயக்கனூர் பொலிசார் சரத்குமாரையும், ஐஸ்வர்யாவையும் கைது செய்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்