நடிகை ஸ்ருதியின் பாலியல் புகார்: நடிகர் அர்ஜுனின் அதிரடி பதில்

Report Print Vijay Amburore in இந்தியா

கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் கூறிய புகாருக்கு நடிகர் அர்ஜுன் மறுப்பு தெரிவித்ததோடு, அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

சமீப காலமாகவே இந்தியா முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் மீடூ புகாரில் பல்வேறு திரைபிரபலங்களும் சிக்கி வருகின்றனர்.

பிரபலங்களும் தங்களுக்கு நடந்த பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் குறித்து இணையத்தில் வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பி வருகின்றனர்.

அந்த வரிசையில் கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன், பிரபல நடிகர் அர்ஜுன் 'நிபுணன்' படப்பிடிப்பின் போது பாலியல் தொல்லை கொடுத்தார் என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகீர் குற்றச்சாட்டினை கிளப்பியிருந்தார்.

இந்த பதிவு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்த நிலையில், குற்றச்சாட்டுக்கு நடிகர் அர்ஜுன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதில், நான் எந்த பெண்ணிடமும் தவறாக நடந்ததில்லை, ஸ்ருதி ஹரிஹரன் புகாரின் பின்னணியில் யாரோ உள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தான் மானநஷ்ட வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers