கூட்டு துஸ்பிரயோகத்திலிருந்து தப்பிக்க நிர்வாணமாக 3வது மாடியிலிருந்து குதித்த இளம்பெண்

Report Print Vijay Amburore in இந்தியா

ஜெய்ப்பூரில் கூட்டு துஸ்பிரயோகத்திலிருந்து தப்பிக்க பெண் ஒருவர் நிர்வாணமாக 3-வது மாடியிலிருந்து குதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூர் மாநிலம் மோகனா பகுதி அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென பெண் ஒருவர் அலறும் சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டார் வேகமாக வெளியில் வந்து பார்த்த பொழுது பெண் ஒருவர் 3-வது மூன்றாவது மாடியிலிருந்து நிர்வாணமாக குதித்துள்ளார்.

உடனே அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து விரைந்து வந்த பொலிஸார் உடனடியாக சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் சம்மந்தப்பட்ட 23 வயதான பெண் நேபாளத்தை சேர்ந்தவர் என்பதும், கடந்த 4 நாட்களுக்கு முன்னதாக தன்னுடைய மாமியாரை சந்தித்து அழைப்பிதழ் கொடுக்க வந்துள்ளார். பாரத் அடுக்குமாடி குடியிருப்பில் யாரும் இல்லாத போது தனியாக இருந்த அந்த பெண்ணை அதே குடியிருப்பில் வசிக்கும் இரண்டு இளைஞர்கள் தூக்கி சென்று கூட்டு துஸ்பிரயோகம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

ஜெய்புரியா மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு உள்காயம் காரணமாக எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் தப்பிய குற்றவாளிகள் கமல் (24), லோகேஷ் (18) இருவரையும் கைது செய்துள்ளனர். சம்பவம் நடந்த பொழுது இருவரும் மது அருந்தியிருந்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டதில், இரண்டு இளைஞர்களும் அடிக்கடி பல பெண்களை அவர்களுடைய அறைக்கு அழைத்து வந்ததாக தெரியவந்துள்ளது. தற்போது இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்