சின்மயி விவகாரம்: வைரமுத்து வாழ்நாளில் நிம்மதியாக தூங்கக்கூடாது... பிரபலத்தின் சர்ச்சை பேச்சு

Report Print Raju Raju in இந்தியா

வைரமுத்து வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக உறங்கக் கூடாது என்று பா.ஜ.க. தேசியச் செயலாளர் எச்.ராஜா சாடியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என பாடகி சினிமயி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த ராஜா,வைரமுத்து மீதான சின்மயியின் புகாரை சுட்டிக் காட்டினார்.

ஆண்டாளை இழிவுபடுத்திய வைரமுத்து வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக உறங்கக் கூடாது எனக் கூறிய ராஜா, அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...