உலகை விட்டு செல்ல விரும்புகிறேன்: மூன்று குழந்தைகளுடன் இளம்தாய் செய்த விபரீத செயல்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் பெண் ஒருவர் தனது மூன்று குழந்தைகளுடன் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சித்தூரை சேர்ந்தவர் முஸ்தபா. இவர் மனைவி ஷபானா. தம்பதிக்கு மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

இதில் 12 வயதான மூத்த மகனுக்கு இதய நோய் இருந்தது. மற்ற இரு பிள்ளைகளுக்கும் அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

குடும்ப தலைவரான முஸ்தபா ஹொட்டலில் வேலை செய்து வந்த நிலையில் சமீபகாலமாக சரியாக வேலைக்கு செல்லவில்லை.

இதோடு மனைவி நடத்தையிலும் சந்தேகப்பட்டு அவருடன் சண்டை போட்டு வந்துள்ளார்.

குடும்ப வறுமை மற்றும் கணவரின் கொடுமையால் வாழ்க்கையை வெறுத்த ஷபானா சில தினங்களுக்கு முன்னர் தனது தாய்க்கு வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் அனுப்பினார்.

அதில், முஸ்தபா குடும்ப செலவுக்கு பணம் தராததோடு, என்னையும் கொடுமைப்படுத்துகிறார்.

நான் இந்த உலகில் வாழ விரும்பவில்லை, என் குழந்தைகளுடன் சேர்ந்து தற்கொலை செய்ய விரும்புகிறேன் என குறிப்பிட்டார்.

இதன் பின்னர் ஷபானா தனது மகன்களுடன் மாயமாகி உள்ளார்.

இது குறித்து ஷபானாவின் தாய் பொலிஸ் புகார் அளித்த நிலையில் ஷபானா மற்றும் பிள்ளைகளை பொலிசார் தேடி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers