அந்த அளவுக்கு மோசமான தகப்பனா? கொந்தளித்த நடிகர் தியாகராஜன்

Report Print Arbin Arbin in இந்தியா

மீ டூ அலையில் சிக்கிய நடிகரும் இயக்குனருமான தியாகராஜன், தம்மைப் பற்றி தவறான செய்திகள் பரவுவது மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

புகைப்படக் கலைஞரான பிரித்திகா மேனன் வெளியிட்டுள்ள புகார் தொடர்பில் விளக்கமளித்த தியாகராஜன்,

பொன்னர் - சங்கர் பட ஷூட்டிங் சமயத்தில் அவங்க ரூம் கதவைத் தட்டினதா அந்தப் பொண்ணு சொல்றாங்க.

ஏன், என்னை டார்க்கெட் பண்ணி அப்படிச் சொன்னாங்கன்னு தெரியலை. அந்தப் பொண்ணு சொன்னது பொய்யினு என்னால் நிரூபிக்க முடியும்.

அந்தச் சம்பவம், கோயம்புத்தூரில் நடந்ததா சொல்றாங்க. அதுவே பொய். அவங்க சொல்ற ஷூட்டிங், பெரம்பலூரில் நடந்துச்சு என்றார்.

மட்டுமின்றி பிரசாந்த், 200 அடி உயரத்தில் டூப் இல்லாமல் தொங்கும் ரிஸ்க்கான சீனை எடுத்துட்டிருக்கோம். அந்த நேரத்தில், ஒரு பொண்ணோட ரூம் கதவை நள்ளிரவில் தட்டுவேனா? அந்த அளவுக்கு மோசமான தகப்பனா நான்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், அந்தப் பொண்ணு மேல புகார் கொடுக்கணும்னாலும் அவங்க அட்ரஸ் எனக்குத் தெரியலைங்க. என் மனைவிக்கும் பிரசாந்துக்கும் என்னைப் பத்தி நல்லா தெரியும்.

ஆனா, பப்ளிக்கில் என் பேர் கெட்டது கெட்டதுதானே என வருத்தமுடன் தெரிவித்துள்ளார் தியாகராஜன்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers