சின்மயி மீது கொலை முயற்சி: அரசியல் பின்னணி இருக்கிறதா? வெளியான பகீர் தகவல்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

தமிழ் சினிமா உலகில் மீடூ விவகாரம் தொடர்பான விவாதங்கள் அதிகரித்துள்ள நிலையில், பாடகி சின்மயி வைரமுத்து மீது வைத்துள்ள பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாடகி சின்மயியியை கொலை செய்ய முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட எழுத்தாளர் ராஜன் என்பவர் இதுகுறித்து பேட்டி அளித்துள்ளார்.

2012 ஆம் ஆண்டு எழுத்தாளர் ராஜன் என்பவர் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக பாடகி சின்மயி புகார் தெரிவித்திருந்தார்.

டுவிட்டரில் சமூக கருத்துக்களை தெரிவிப்பதில் அதிகம் ஈடுபாடு காட்டும் சின்மயி, டுவிட்டரில் தெரிவித்து வந்த தொடர் கருத்துக்களுக்கு, எழுத்தாளர் ராஜன் என்பவர் தொடர்ந்து பதில் கொடுத்து வந்தார்.

இதுவே, இவர்களுக்கு பிரச்சனை ஏற்பட முக்கிய காரணமாக இருந்து வந்தது. அதாவது சின்மயி முன்வைக்கும் கருத்துக்கள் பிராமின் சாதி ரீதியானது என ராஜன் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்த காரணத்தால் பிரச்சனை அதிகமானது.

கோயம்புத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு சின்மயி கலந்துகொள்ள வரும்போது, தனக்கு கொலை மிரட்ல் விடுத்ததாக ராஜன் மீது சின்மயி புகார் அளித்திருந்தார்.

இந்த சம்பத்தால் பாதிக்கப்பட்ட ராஜன் தற்போது அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, வழக்கு தொடரப்பட்ட இரண்டாவது நாளில் என்னை கைது செய்தார்கள். கொலை முயற்சி என்று என் மீது வழக்கு தொடர்ந்து தற்போது வரை அதனை கொண்டு செல்கிறார்கள்.

மேலும், சின்மயி என்னை மிரட்டினார்.அரசியல் தலைமை எனக்கு நெருக்கமாக உள்ளது, நான் நினைத்தால் உன்னை என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என கூறினார். அப்போது ஆட்சியில் இருந்தது ஜெயலலிதா, அவரது பெயரை வைத்து என்னை மிரட்டினார் என ராஜன் கூறியுள்ளார்.

கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக என் மீது புகார் அளித்துள்ளார், ஆனால் அதற்கான ஆதாரம் எங்கு இருக்கிறது. இதனால் எனது அரசாங்க வேலை போனது. அவருக்கு பின்னணியில் இருக்கும் பின்புலம் தான் காரணம். பார்ப்பன லாபியை பின்புலமாக வைத்து அவர் இவ்வாறு செயல்படுகிறார்.

சின்மயிக்கும், எனக்கும் நடந்தது பார்ப்பன திராவிட சண்டை. பொதுதளத்தில் ஒரு பிரபலமாக இருக்கும்போது எதுவேண்டுமானாலும் சொல்லக்கூடாது. அப்படி கருத்து சொன்னால் எதிர்வினைகள் வரும்.

அப்படி வரும் எதிர்வினைகளை பிரபலங்கள் கடந்துசெல்ல வேண்டும். அல்லது அதனை விட வேண்டும். ஆனால், சின்மயி அப்படி கிடையாது. நான் சொல்வதை தான் சொல்வேன், அதை நீங்கள் கேட்டுதான் ஆகவேண்டும் என்பதுதான் அவரது தீர்மானம்.

தற்போது, வைரமுத்து மீது சின்மயி வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு சம்பிரதாயத்துக்காக மறுப்பு தெரிவித்த வைரமுத்து மீது பார்வை திரும்பாமல், சின்மயி மீது அதிக வசைபாடுவதற்கு காரணம், அவரது பழைய பிரச்சனைகள்தான்.

சின்மயிக்கு எப்போதும் உண்மை மீது ஒரு அவநம்பிக்கை இருக்கிறது. அவர் நடந்தவற்றை மட்டும் கூறமாமல் கொஞ்சம் வார்த்தைகளை சேர்த்து கூறுவார். இப்படி அவரும், அவரது அம்மாவும் அனைத்து ஊடங்களுக்கும் மாறி மாறி பேட்டி கொடுத்து வருகின்ற நிலையில் முன்னுக்கு பின் முரணாக வார்த்தைகள் தடம் மாறுகின்றன.

இதன் காரணத்தினாலேயே, சின்மயி வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக திரும்புகின்றன. சின்மயிக்கு பதிலாக வேறு ஒரு பெண் வைரமுத்து மீது குற்றம்சுமத்தியிருந்தால் இந்நேரம் வைரமுத்து எதிராக அனைத்தும் திரும்பியிருக்கும்.

ஆனால், சின்மயிக்கு இதற்கு முன்னர் இருந்த பழைய பிரச்சனைகளே தற்போது அவருக்கு எதிராக உள்ளது என ராஜன் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்