இலங்கைவாசி தானே நீ? சென்னை சிறையில் தமிழருக்கு நேர்ந்த கொடுமை.. நெஞ்சை உருக்கும் கடிதம்

Report Print Raju Raju in இந்தியா

சென்னை புழல் சிறையில் இருக்கும் இலங்கை தமிழர் தனக்கு சிறையில் நடக்கும் கொடுமைகள் குறித்து கடிதம் வாயிலாக நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்றைத் தாக்கல் செய்யவுள்ளார்.

சென்னைப் புழல் சிறையில் முதல் வகுப்பு கைதியாக அடைக்கப்பட்டிருக்கிறார் இலங்கையைச் சேர்ந்த அசோக்குமார்.

இவர் உயர்நீதிமன்றத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், நேற்று மாலை திடீரென என்னை `ஏ' வகுப்பில் இருந்து தனியறைக்கு மாற்றம் செய்துவிட்டனர். காரணம் ஏதும் கூறவில்லை.

தனியறையில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறைவாசிகள், சிறைக் குற்றம் புரிந்த சிறைவாசிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இது துன்புறுத்தும் நடவடிக்கையாகும். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கண்காணிப்பாளர் செந்தில்குமார் என்னிடம், இலங்கை சிறைவாசிதானே நீ. எதாவது செல்போனில் பேசுகிறாயா? என்றார். ` இல்லை அய்யா, நான் இன்னும் 3 மாதங்களில் விடுதலையாக உள்ளேன்.

நான் சிறையில் எந்தத் தவறான செயலிலும் ஈடுபடவில்லை என்று கூறினேன். இருப்பினும், திடீரெனப் பழிவாங்கும் விதமாக மனநலம் பாதிக்கப்பட்ட சிறைவாசிகள் அறையில் அடைக்கப்பட்டுள்ளேன்.

சந்தேகம் என்ற பெயரில், இலங்கை நாட்டைச் சேர்ந்த சிறைவாசி என்றாலும் சந்தேகப்படுவதும் கேவலமாக நடத்துவதும் மனவருத்தத்தைத் தருகிறது. பாதுகாப்பற்ற சூழலில் உள்ளேன்

எனக்குப் பெரிய அளவில் யாரும் இல்லை. உங்களை மட்டும்தான் மலை போல நம்பியுள்ளேன். நான் தாக்கப்பட்டாலோ அல்லது வேறு சிறைக்கு மாற்றப்பட்டாலோ அதற்கு கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் பொறுப்பு.

அவர் மேல் இதுவரையில் முப்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சரியான முறையில் வழக்கை நிரூபிக்காததால் மிஸ்டேக் ஆஃப் ஃபேக்ட் என்ற அடிப்படையில் பல வழக்குகள் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது என எழுதியுள்ளார்.

அசோக்குமாரின் மனைவி தேன்மொழி கூறுகையில், இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்கை தாக்கல் செய்ய இருக்கிறோம். இதற்கு மேல் எதுவும் பேச விரும்பவில்லை என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்