ஒரே இடத்தில் அடுத்தடுத்து உயிரிழந்த 7 யானைகள்: காரணம் என்ன? நெஞ்சை உருக்கும் புகைப்படங்கள்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் மின்வேலியில் சிக்கி 7 காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவின் தென்கனல் மாவட்டத்தில் உள்ள கமலங்கா கிராமத்தில், வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்தில் மின்வேலிப் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தண்ணீர் குடிப்பதற்காக வந்த காட்டுயானைக் கூட்டம் ஒன்று மின்வேலியில் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதில் 7 யானைகள் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள், யானைகளின் உடல்களை மீட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களை பலத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers