நண்பரை 25 துண்டுகளாகவும், மனைவியை கழுத்தறுத்தும் கொலை செய்த நபர்: அம்பலமான உண்மை

Report Print Vijay Amburore in இந்தியா

மனைவியை நகைக்காக கொள்ளையர்கள் தான் கொலை செய்தார்கள் என கூறி நாடகமாடிய தொழிலதிபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியானா மாநிலம் குர்கான் பகுதியில் 75 வயது தொழிலதிபர் ஹர்னெக் சிங்கின் மனைவி வீட்டில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொலிஸாரிடம், ஹர்னெக் நகைக்காக கொள்ளையர்கள் தான் மனைவியை கொலை செய்து விட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர் கொடுத்த வாக்குமூலத்தில் நம்பிக்கை இல்லாத பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், மனைவியை கொலை செய்தது நான் தான் என ஹர்னெக் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுபற்றி விசாரணையில் கூறிய அவர், தன்னுடைய நபர் ஜாஸ்கரன் சிங்கிடம் ரூ.40 லட்சம் பணம் கடன் வாங்கியுள்ளார். ஜாஸ்கரன் அதனை திருப்பி கேட்டபொழுது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த ஹர்னெக் கடந்த 14ம் தேதியன்று, ஜாஸ்கரனை கொலை செய்து 25 துண்டுகளாக வெட்டியுள்ளார். பின்னர் அந்த பாகங்களை இரண்டு பிளாஸ்டிக் பைகளில் போட்டு லூதியானா பகுதியில் உள்ள சாலை அருகே தூக்கி எறிந்துள்ளார்.

பொலிஸார் எப்படியும் கைது செய்துவிடுவார்கள் என்பதை அறிந்த ஹர்னெக், தன்னுடைய மனைவியுடன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் அதற்கு அவருடைய மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார். உடனே அவருடைய கழுத்தை அறுத்து கொலை செய்த ஹர்னெக், தன்னுடைய கையையும் அறுத்துள்ளார்.

இதைப்பற்றி பொலிஸார் கேட்டால், திருடர்கள் என்னை தாக்கிவிட்டு மனைவியை கொலை செய்துவிட்டனர் என கூறலாம் என திட்டமிட்டுள்ளார்.

இந்த தகவல் விசாரணையில் வெளியானதை அடுத்து, குற்றவாளியை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு விசாரித்த நீதிபதி 2 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்