சின்மயி குறித்து சொல்கிறேன்.. இதுதான் உண்மை! பெண் பிரபலம் வெளியிட்ட தகவல்

Report Print Raju Raju in இந்தியா

சின்மயி ஒரு டப்பிங் ஆர்டிஸ்டே கிடையாது எனவும், எங்கள் டப்பிங் யூனியன் பற்றி அவர் பேசும் வதந்தியை நாங்கள் விரும்பவில்லை எனவும் டப்பிங் ஆர்டிஸ்டான கவிதா கூறியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறினார், தன்னை போல பலர் பாதிக்கப்பட்டதாகவும் டுவிட்டரில் பதிவிட்டார்.

மேலும், டப்பிங் ஆர்டிஸ்ட்களும் இது போன்ற தொல்லையில் சிக்கியதாக சின்மயி கூறினார்.

இந்நிலையில் இது குறித்து கவிதா என்ற டப்பிங் ஆர்டிஸ்ட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சின்மயி நடத்தி வரும் மீ டூ என்ற அசிங்கத்தை பற்றி பேச போகிறேன்.

சின்மயி ஒரு டப்பிங் ஆர்டிஸ்டே கிடையாது, பல வருடங்களுக்கு முன்னர் அவர் அந்த வேலையை செய்தாலும் தற்போது உறுப்பினர் இல்லை.

எங்கள் டப்பிங் யூனியன் பற்றி தேவையில்லாத வதந்தியை சின்மயி பேசுகிறார். டப்பிங் யூனியன் மீது வழக்கு இருப்பதாக அவர் பொய் கூறுகிறார்.

நீங்கள் மற்றவர்களை தாழ்த்தி பேசுவது மட்டுமில்லாமல் உங்களையே தாழ்த்தி பேசுகிறீர்கள். உங்கள் பேச்சை எல்லோரும் பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்பதை உணருங்கள்.

பல வருடங்களுக்கு முன்னர் நடந்து விடயத்தை இப்போது ஏன் சொல்கிறீர்கள், அப்போதே இது குறித்து பேசாதது ஏன்?

உங்களின் பொய்யான வதந்திக்கு எதிராக பலரும் குரல் கொடுக்க தொடங்கியுள்ளார்கள்.

எங்களை போன்ற பலமான பெண்களுக்கு எதிராக மீ டூ பிரச்சனை வராது சின்மயி, அதை நினைவில் வைத்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்