தனிமையில் இருந்ததை கணவர் பார்த்துவிட்டார்! கணவனை கொடூரமாக கொன்ற மனைவியின் வாக்குமூலம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

திருப்பூர் மாவட்டத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி பொலிசில் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

ராமு - கவிதா தம்பதியினரின் மகன் கல்லூரியில் பயின்று வருகிறான்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மக்காச்சோளக்காட்டில், ராமு பிணமாக கிடந்தார்.

இது பற்றிய தகவல் அறிந்தும் பொலிசார் ராமு உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ராமு கொலை தொடர்பாக அவருடைய மனைவி கவிதாவிடம் பொலிசார் விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

பின்னர் அவரை தீவிரமாக விசாரணை நடத்தியதில், கவிதாவும், அவருடைய காதலன் தாராபுரத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஹரிதாசும் (41) சேர்ந்து ராமுவை காரில் கடத்தி சென்று மக்காச்சோளக்காட்டில் வைத்து கல்லால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

நடந்த சம்பவம் குறித்து பொலிசில் கவிதா அளித்துள்ள வாக்குமூலத்தில்,

தாராபுரத்தில் குடியிருக்கும் எனது தங்கையை பார்க்க நான் அடிக்கடி செல்வேன். அப்போது எனது தங்கையின் வீட்டின் அருகில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் ஹரிதாஸ் (41) என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

எங்களுக்கு வீடும், இடமும் வாங்க வேண்டும் என்றும், அதற்காக இடம் இருந்தால் சொல்லுங்கள் என்று அவரிடம் தெரிவித்தேன். அதன்பிறகு நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்தோம். இந்த சந்திப்பு எங்கள் இருவருக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவ்வப்போது ஹரிதாசை காங்கேயத்தில் உள்ள எனது வீட்டிற்கு வரவழைத்து, இருவரும் தனிமையில் இருப்போம். ஒருநாள் நாங்கள் 2 பேரும் தனிமையில் இருந்ததை என் கணவர் பார்த்து விட்டார்.

இதனால், என்னை கண்டித்து ஹரிதாசுடனான தொடர்பை கைவிடுமாறு கூறினார். ஆனால், என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதனால் ராமுவை கொலை செய்வது என திட்டம் தீட்டி, நானும், ஹரிதாசும் ஒரு காரில் ராமு வேலை செய்யும் புதுப்பைக்கு சென்றோம். அங்கு வேலை முடிந்து மதுபோதையில் தள்ளாடியபடி வந்த ராமுவை காரில் கடத்தினோம்.

பின்னர் அவரை நல்லசெல்லிபாளையம் பகுதியில் உள்ள மக்காச்சோள காட்டிற்குள் அழைத்து சென்று கட்டையால் தாக்கினோம். பின்னர் அருகில் கிடந்த கல்லை எடுத்து ராமுவின் முகம், தலை ஆகிய பகுதியில் அடித்து கொலைசெய்தோம் என அதிர்ச்சி வாக்கு மூலம் அளித்துள்ளார்.

கவிதாவையும், ஹரிதாசையும் பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்