சொத்துக்காக தாய் - தந்தையை சித்ரவதை செய்து வெட்டி வீசிய மோசமான மகன்

Report Print Deepthi Deepthi in இந்தியா

நாமக்கல் மாவட்டத்தில் சொத்துக்காக தாய் தந்தையை சித்ரவதை செய்து வெட்டி வீசிய மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் மோர்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் சபாபதி - சரசு தம்பதி. இவர்களுக்கு பழனிவேல் என்ற மகனும் சுமதி என்ற மகளும் உள்ளனர்.

இருவரும் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

சபாபதி தன்னிடம் இருந்த 27 ஏக்கர் நிலத்தில் மகனுக்கு 20 ஏக்கர் நிலத்தையும் மகளுக்கு 7 ஏக்கர் நிலத்தையும் எழுதிக் கொடுத்துள்ளனர்.

அந்த 7 ஏக்கரையும் தனக்கே தரவேண்டும் என, பழனிவேல் பெற்றோருக்கு நிர்ப்பந்தம் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர்களுக்கு சொந்தமான வீட்டில் இருந்தும் விரட்டியுள்ளார்.

கடந்த 25-ம் தேதி தன் பெற்றோரை காரில் கூலிப்படை கும்பல் உதவியுடன் கடத்திச் சென்ற பழனிவேல், அவர்களை சித்ரவதை செய்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளான்.

பின்னர் கோனேரிப்பட்டி ஏரி அருகே சபாபதி மற்றும் அவரது மனைவி சரசுவை அந்த கும்பல் வீசிச் சென்றுள்ளது.

இந்நிலையில் ஏரிப்பக்கம் வந்த பொதுமக்கள் முதிய தம்பதியை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதுதொடர்பான புகாரையடுத்து, பழனிவேல் மற்றும் கூலிப்படையினர் மீது தாக்குதல், திருட்டு உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த பொலிசார், அவர்களை தேடிவருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்