திருமணமான 4 மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட புதுமாப்பிள்ளை: மனைவி செய்த செயலின் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் தனக்காக கடவுளிடம் வேண்டி விரதம் இருக்க மனைவி மறுத்ததால் கணவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தபிரதேச மாநிலத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. தீப் சந்த் (21) என்ற இளைஞருக்கும் இளம் பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

பொதுவாக வட இந்திய மாநிலங்களில் Karwa Chauth என்ற கடவுள் வழிபாடு கடைப்பிடிக்கப்படும்.

இந்த சமயத்தில் கணவரின் உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக மனைவி உணவு சாப்பிடாமல் விரதம் இருப்பார்.

இந்த பிரார்த்தனையை செய்யாத தீப் சந்தின் மனைவி கணவருக்காக விரதம் இருக்கவில்லை.

இதையடுத்து தனது நலனுக்காக ஏன் விரதம் இருக்கவில்லை என மனைவியிடம் தீப் சந்த் கேட்டுள்ளார். இதற்கு தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் இருக்கவில்லை என மனைவி கூறினார்.

மனைவியின் செயலால் மனமுடைந்த தீப் சந்த் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers