உலகிலேயே மிக உயரமான சிலை இன்று திறப்பு! எங்கு தெரியுமா?

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவில் இன்று திறக்கப்படவுள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலை, உலகிலேயே மிக உயரமான சிலை எனும் பெருமையைப் பெற்றுள்ளது.

சீனாவில் இருக்கும் புத்தர் சிலை, உலகிலேயே மிக உயரமான சிலையாக தற்போது வரை இருந்து வந்தது. இதன் உயரம் 419 அடியாகும். இந்நிலையில், இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் சுதந்திர போராட்ட வீரரும், இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவருமான சர்தார் வல்லபாய் படேலின் சிலை இன்று திறக்கப்பட உள்ளது.

இதுதான் உலகிலேயே மிக உயரமான சில என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒற்றுமையின் சிலை என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சிலையின் உயரம் 787 அடியாகும். இது அமைந்துள்ள பீடத்தின் உயரம் மட்டுமே 190 அடியாகும்.

அதனை தவிர்த்து கால் பகுதியில் இருந்து தலை வரை இந்த சிலையின் உயரம் 597 அடி ஆகும். சர்தார் வல்லபாய் படேலின் இந்த சிலை தயாரிப்பிற்கு 70,000 டன் சிமெண்ட், 18,500 டன் இரும்பு, 1,700 டன் பித்தளை ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சிலையின் வெளிப்பகுதி பித்தளை தகடுகளாலும், உட்பகுதி கான்கிரீட் கலவையாலும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையின் சிறப்பு என்னவென்றால், சுமார் 220 கிலோ மீற்றர் காற்றையும், 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தையும் தாங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த சிலையின் மொத்த செலவு சுமார் 3 ஆயிரம் கோடி என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த பிரம்மாண்ட சிலையினை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers