குளத்தில் சடலமாக மிதந்த மூதாட்டி உயிர்பிழைத்த அதிசயம்! இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் குளத்தில் மூழ்கிய மூதாட்டியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆட்டோ ஓட்டுனர்கள் முன்வராததால், இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்று உயிர்பிழைக்க வைத்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருக்கும் காசாங்குளத்தில் சின்னப்பொண்ணு என்ற மூதாட்டி குளத்தில் மிதந்து கொண்டிருந்தார்.

இதைக் கண்ட அங்கிருந்த மக்கள் மூதாட்டி இறந்துவிட்டதாக நினைத்து, சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக வேடிக்கை பார்ப்பதும், படம் பிடிப்பதுமாக குளத்தை சுற்றி நின்றுள்ளனர்.

இந்த தகவல் தீயணைப்பு படையினருக்கு தெரியவர, அவர்கள் உடனடியாக குளம் இருக்கும் பகுதிக்கு விரைந்து சடலம் என்று நினைத்தே மூதாட்டியை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட மூதாட்டை சோதனை கூட்டத்தில் இருந்த மருத்துவர் ஒருவர், நாடித்துடிப்பு இருப்பதாகவும், இன்னும் இவர் இறக்கவில்லை, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றால், காப்பாற்றிவிடலாம் என்று கூறியுள்ளார்.

இதனால் அங்கிருந்த மக்கள் அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர்களை நாடியுள்ளனர், ஆனால் அவர்கள் உதவுவதற்கு முன்வராமல் சென்றதால், அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் இருசக்கர வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று உயிர்பிழைக்க வைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்