இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்கு இந்தியா குரல் கொடுக்க வேண்டும்: இந்திய தேசிய கம்யூனிஸ்ட் கட்சி செயலர்

Report Print Kabilan in இந்தியா

இலங்கையில் உள்ள தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க, இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

மஹிந்த ராஜபக்சே இலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ளதால், அங்குள்ள தமிழர்களின் நிலை இனி அச்சுறுத்தலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா இதுதொடர்பாக பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘இலங்கை பிரச்சனையை இந்தியா எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டியுள்ளது. ராஜபட்சே ஆட்சியில் தமிழ் மக்கள் அடைந்த கொடுமைகள் வரலாற்றில் மறக்க முடியாதவை.

அவர் அங்கு இப்போது பிரதமராகப் பதவியேற்றிருக்கிறார். இந்தச் சூழலில் இலங்கையின் நாடாளுமன்றம் எப்படி நடைபெறப் போகிறது. தமிழ் மக்களின் நிலை, ஜனநாயக நிலை ஆகியவை குறித்து, வரலாற்று ரீதியில் நெருக்கம் கொண்ட இந்தியா கவனிக்க வேண்டியது கட்டாயம்.

அங்குள்ள தமிழ் மக்களின் நிலை குறித்து, உறுதியான நடவடிக்கையை இந்தியா எடுப்பதோடு, அவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கவும் வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்