திருநங்கையை காதலித்து திருமணம் செய்ய விரும்பிய இளைஞர்: அதன் பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் திருநங்கையை திருமணம் செய்ய நினைத்த இளைஞரின் திருமணத்தை கோவில் நிர்வாகம் செய்து வைக்க மறுத்ததால், அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருண்குமார். டிப்ளோமா படித்துள்ள இவர், பி.ஏ இங்கிலீஷ் லிட்ரேச்சர் படிக்கும் ஸ்ரீஜா என்ற திருநங்கையை காதலித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அவரை திருமணம் செய்யவும் முடிவு செய்துள்ளார். இதற்காக கல்யாண பத்திரிக்கை எல்லாம் அடித்து, தூத்துக்குடி சிவன் கோவிலில் திருமணத்திற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்துள்ளார்.

இறுதியில் திருமணம் செய்யவிருந்த போது, ஸ்ரீஜா திருநங்கை என்பதை கோவில் நிர்வாகம் அறிந்ததால், இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க மறுத்துள்ளது.

திருமண ஆசையோடு வந்த இருவரையும் சேர்த்து வைக்காமல் கோவில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததால், அவர்கள் அதிர்ச்சியுடனும், ஏமாற்றத்துடனும் திரும்பி சென்றதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்