முக்கிய நபருடன் எடுத்த புகைப்படத்தை மாணவிகளுக்கு அனுப்பினேன்: பெயரை வெளியிட்ட தமிழகத்தில் பரபரப்பை கிளப்பிய நிர்மலாதேவி

Report Print Raju Raju in இந்தியா

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மாணவிகளுக்கு அனுப்பியது குறித்து நிர்மலாதேவி வாக்குமூலம் அளித்துள்ளார்.

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கல்லூரி மாணவிகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.

இவர் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள், யாருக்காக மாணவிகளிடம் பேசினார் பல விடயங்கள் குறித்து சிபிசிஐடி பொலிசார் விசாரித்தனர். இந்த விசாரணையில் நிர்மலாதேவி அளித்த வாக்குமூலங்கள் வெளியாகியுள்ளன.

இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பெயரும் அடிப்பட்டது.

இந்நிலையில் அவரை பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் பார்த்ததாக நிர்மலாதேவி கூறியுள்ளார்.

அவரின் வாக்குமூலத்தில், மார்ச் 13-ஆம் திகதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தங்குவதற்காக தேவையான உடைமைகளை எடுத்து கொண்டு செல்லும் போது அன்னை தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வருவதை தெரிந்து கொண்டு அங்கு சென்றேன்.

பட்டமளிப்பு விழாவை முடித்து விட்டு திரும்பிய ஆளுநர் கண்காட்சியை திறந்து வைப்பதற்காக வந்திருந்தார். அவரை நேரில் காண வேண்டும் என்ற ஆவலில் நானும் கண்காட்சிக்கு சென்றேன். அவர் கண்காட்சியை திறந்து வைத்தபோது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தேன். ஆளுநருடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டேன்.

கவர்னர் வருகையின் போது எடுத்த வீடியோவை மூன்றாம் ஆண்டு மாணவிகள் 3 பேர் மற்றும் முதலாம் ஆண்டு மாணவி ஒருவருக்கு வாட்ஸ் அப் செய்தேன்.

எனக்கு ஆளுநரிடமே செல்வாக்கு இருப்பதாக மாணவிகளிடம் கூறி எனது காரியத்தை சாதிக்க புகைப்படங்களை அனுப்பினேன்.

ஆளுநருடன் நான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பார்த்தால் மாணவிகள் எனக்கு பெரிய இடத்தின் தொடர்பு இருக்கிறது என்ற பயத்தில் நான் என்ன சொன்னாலும் செய்வார்கள் வெளியே சொல்ல மாட்டார்கள் என நினைத்தேன். ஆனால் நான் நினைத்தது தவறாகிவிட்டது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்