அம்மா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்...நான் மரணத்தை சந்திக்கிறேன்: செய்தியாளரின் உருக்கமான வீடியோ

Report Print Deepthi Deepthi in இந்தியா

சத்தீஸ்கரியில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் தீவிரவாத தாக்குதலை காயமடைந்ததையடுத்து தனது அம்மாவுக்கு உருக்கமான வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சத்தீஸ்கரில் நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் தேர்தலை முன்னிட்டு தூர்தர்ஷன் செய்தியாளர், கமெராமேன், லைட்டிங் உதவியாளர்கள் மற்றும் அவர்களுடன் காவல் துறை அதிகாரிகளும் சென்றுள்ளனர்.

அப்போது திடீரென தீவிரவாத நக்சல்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் தூர்தர்ஷன் கமெராமேன் அச்சுதானந்த சாஹீ மற்றும் இரண்டு காவல் துறையினர் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதலின்போது இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த செய்தியாளர் மற்றும் லைட்டிங் உதவியாளர் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர்.

இந்த நிலையில், லைட்டிங் உதவியாளர் ஷர்மா, தான் பதிவுசெய்த வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

அம்மா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். இந்தத் தாக்குதலில் ஒருவேளை நான் உயிரிழக்கக்கூடும். நான் மரணத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு பயமாக இல்லை. ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. நான் உயிர் பிழைப்பேன் என எனக்கு நம்பிக்கை இல்லை.

எல்லா பக்கமும் நக்கசல்கள் சூழ்ந்துள்ளனர், 45 நிமிடம் நீடித்த இந்தத் தாக்குதல்குறித்து இவர் பேசிக்கொண்டிருக்கும்போதே துப்பாக்கி சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers