நடிகர் சிவக்குமார் தள்ளிவிட்ட செல்போனின் மதிப்பு இவ்வளவு ரூபாயா? அது என்னது கூட இல்லை என வாலிபர் வேதனை

Report Print Santhan in இந்தியா

திரைப்பட நடிகர் சிவக்குமார் தள்ளிவிட்ட செல்போனின் மதிப்பு 19 ஆயிரம் ரூபாய் எனவும், அது என்னது கூட இல்லை என்று வாலிபர் வேதனையுடன் கூறியுள்ளார்.

தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் இருக்கும் மருத்துவமனை திறப்பு விழாவிற்கு நடிகர் சிவக்குமார் சென்றிருந்தார்.

அப்போது அங்கிருந்த வாலிபர் ஒருவர் நடிகர் சிவக்குமார் அருகில் சென்று ஆசையோடு செல்பி எடுக்க முயன்றார். ஆனால் சிவக்குமாரோ கோபமாக அந்த செல்போனை தள்ளிவிட்டார்.

அது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதன் பின் சிவக்குமார் அப்படி நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்டார்.

இந்நிலையில் அந்த வாலிபர் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், 19 ஆயிரம் ரூபாய் செல்போன் போய்விட்டது, அது என் செல்போன் கூட இல்ல என் அண்ண செல்போன்.

அன்றைய தினத்தில் மருத்துவமனையை திறந்து வைப்பதற்காக துணை முதல்வர் ஒபிஎஸ் வருவதாக இருந்தார்.

ஆனால் அவர் வர வில்லை, அவருக்கு பதிலாக அமைச்சர் உதயகுமார் வந்தார். அவருடன் செல்பி எடுத்தேன் அவர் எதுவும் சொல்ல வில்லை. ஆனால் நடிகர் சிவகுமார் தான் இப்படி கோபப்பட்டு தட்டி விட்டு விட்டார் என வேதனையுடன் கூறியுள்ளார்.

இளைஞரின் இந்த வீடியோவைக் கண்ட இணையவாசிகள் மன்னிப்பு கேட்ட சிவக்குமார், அந்த வாலிபருக்கு செல்போன் வாங்கிதர எவ்வளவு நேரம் ஆகும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers