பலருடன் தொடர்பு..தாலியை கழற்றி வீசினாள்: இளம் பெண்ணை கொலை செய்த இளைஞரின் திடுக்கிடும் வாக்குமூலம்

Report Print Santhan in இந்தியா

தமிழத்தில் இளம் பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்த கொலையாளி, அவள் தாலியை கழற்றி வீசியதால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ரோஸ் காட்டேஜ் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் குமார். சவுதி அரேபியாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு லோகேஸ்வரி என்ற மனைவியும், கார்த்திகேயன் என்ற 4 வயது மகன் உள்ளனர். கணவர் வெளிநாட்டில் வேலை செய்வதால் லோகேஸ்வரி தனது மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு லோகேஸ்வரி கழுத்து அறுபட்ட நிலையில் வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது மகன் கார்த்திகேயறும் கழுத்து அறுக்கப்பட்டு கிடந்தார்.

அதன் பின் இந்த சம்பவம் பொலிசாருக்கு தெரியவர் விரைந்து வந்த பொலிசார் சிறுவன் கார்த்திகேயன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையடுத்து இது தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில், லோகேஸ்வரியின் செல்போனுக்கு வந்த அழைப்புகள் மற்றும் அவரது செல்போனில் இருந்து சென்ற அழைப்புகளை சேகரித்தும், அவரது வீட்டிற்கு அடிக்கடி வருபவர்களின் விவரங்களை சேகரித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அந்த எண்களில் ஒரு செல்போன் எண் மட்டும் சம்பவம் நடந்த நாள் முதல் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பின் இந்த எண்ணை பயன்படுத்துபவர் கவுரிசங்கர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பொலிசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கவுரி சங்கர், லோகேஸ்வரியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

அவர் அளித்த வாக்குமூலத்தில், ஈரோடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான எண்ணை நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாகவும், பகுதி நேர வேலையாக தனியார் நிறுவனத்தின் உடல் எடையை குறைக்கும் பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்ததாகவும் தெரிவித்தார்.

அந்த நிறுவனத்தின் கூட்டத்தில் லோகேஸ்வரியும் கலந்து கொள்ள வந்தார். அப்போது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் காதலாக மாறியது.

இதைத் தொடர்ந்து இருவரும் சென்னிமலை கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து லோகேஸ்வரியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று கவுரி தங்கி வந்துள்ளார்.

இந்தநிலையில் தான் லோகேஸ்வரிக்கு ஏற்கனவே திருமணம் ஆன விடயம் மற்றும் பல ஆண்களுடன் தொடர்பு இருந்தது கவுரி சங்கருக்கு தெரியவந்துள்ளது.

இதனால் ஆத்திரத்தில் இருந்த அவர் கடந்த 27-ஆம் திகதி லேகேஸ்வரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது லேகேஸ்வரி தாலியை கழற்றி வீசியதால், மேலும் ஆத்திரமடைந்தkothagiri lady murder by her lover அவர் அங்கிருந்த கத்தரிக்கோலால் லேகேஸ்வரியின் கழுத்தில் குத்தி உள்ளார்.

இதனை கண்ட அவரது மகன் கார்த்திகேயன் வெளியே சொல்லிவிடுவான் என்ற அச்சத்தில் அவனுடைய கழுத்தையும் அறுத்து விட்டு லோகேஸ்வரி கழற்றி வீசிய தாலியை எடுத்து விட்டு தப்பி சென்றுவிட்டு, அந்த தாலியை திருப்பூரில் உள்ள அடகுக்கடை ஒன்றில் அடகு வைத்து பணத்தை பெற்று ஈரோட்டுக்கு சென்றதாக வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers