பலத்த காயங்களுடன் வீட்டில் இறந்து கிடந்த சிறுமி: விசாரணையில் வெளியான பகீர் தகவல்

Report Print Arbin Arbin in இந்தியா

கேரளாவில் 7 வயது சிறுமி பலத்த காயங்களுடன் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பாக தாயாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் சாலக்குடி பகுதியை சேர்ந்தவர் 47 வயதான விபின். ஐக்கிய அமீரகத்தில் பணியாற்றிவரும் இவரது மனைவியும் 7 வயது மகளும் சாலக்குடியில் குடியிருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிறுமி ஆவணி பலத்த காயங்களுடன் வீட்டில் இறந்து கிடந்துள்ளார். தகவல் அறிந்து வந்த சாலக்குடி பொலிசார் சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மகள் இறந்தது குறித்து துபாயில் இருக்கும் விபினுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்.

இந்த நிலையில் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பொலிசில் புகார் அளித்துள்ளார். மகள் மரணமடைந்தது குறித்து அவரது தாயார் சைனிமோளிடம் விசாரணை நடத்தியபோது அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார்.

இதில் சந்தேகம் அடைந்த பொலிசார் சாலக்குடி நீதிமன்ற உத்தரவு பெற்று திருச்சூர் மனநல மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.

அங்கு சிகிச்சை பெற்றபோது தாய் சைனிமோளை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கள்ளக்காதலில் மகளை கொன்று மனநல பாதிப்பு போல் நடிக்கிறாரா? அல்லது வேறு காரணமா? என்று பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers