நண்பரின் படுக்கையறையில் கண்ட காட்சி: இளைஞரின் உயிரை பலிவாங்கிய காதல்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் மும்பை மாநகரில் ஒரே பாலின ஈர்ப்பு இளைஞரின் தலையில் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே பாலின் ஈர்ப்பு இளைஞர்கள் மூவருக்கு இடையே ஏற்பட்ட காதலே இறுதியில் கொடூரமான கொலையில் முடிந்துள்ளது.

இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான இளைஞர்கள் மூவர் காதலில் விழுந்துள்ளனர். இதில் ஒரு இளைஞரை வெளியேற்றவே இந்த கொலையை செய்துள்ளனர்.

25 வயதான பார்த் ராவல் என்ற இளைஞரை தலையில் காயங்களுடன் ஆபத்தான நிலையில் ஞாயிறு காலை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

முதலில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்ப்பித்துள்ளனர். ஆனால் அவரது நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என வந்ததும் லீலா மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர்.

இந்த நிலையில் உரிய சிகிச்சைக்கு இடம் தராமல் அந்த இளைஞர் மருத்துவமனையில் இருந்து தப்பியுள்ளார்.

இதனிடையே மாலையில் குறித்த இளைஞர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியானது.

முகமத் ஆசிஃப் என்ற இளைஞரை பார்த் ராவல் மற்றும் தவால் ஆகிய இரு இளைஞர்களும் காதலித்துள்ளனர்.

இதனிடையே கருத்துவேறுபாடு காரணமாக தவாலிடம் இருந்து ஆசிஃப் விலகியுள்ளார். ஞாயிறன்று ஆசிஃபின் குடியிருப்புக்கு சென்ற தாவல் அங்கே, படுக்கை அறையில் பார்த் ராவலை பார்த்துள்ளார்.

இதனையடுத்து இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆத்திரத்தில் தவால் பார்த்தின் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார்.

இச்சம்பவத்தை ஆசிஃப் பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளார். கொலை முயற்சிக்கு வழக்குப் பதிந்த பொலிசார் பின்னர் கொலை செய்ததாக வழக்கை திருத்தியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்