பைக்கில் பயணம் செய்த கொடிய விஷம் கொண்ட பாம்பு: நடந்த சம்பவம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

திருநெல்வேலி மாவட்டத்தில் கொடிய விஷம் கொண்ட பாம்புடன் பயணம் செய்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

லட்சுமணன் என்பவர் தனது பைக்கில் சென்றுள்ளார். பயணத்தின்போது, சாலையோர டீக்கடையின் அருகே பைக்கை நிறுத்திவிட்டு டீ குடித்தார்.

அங்கிருந்து மீண்டும் புறப்படுவதற்காகப் பைக்கை எடுத்தபோது பெட்ரோல் டேங்கின் அடியில் இருந்து பாம்பு தலைகாட்டியுள்ளது.

இதனைப்பார்த்த அவர் அலறி கூச்சல் எழுப்பியதால் அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் உதவிக்கு ஓடிவந்துள்ளனர்.

பாம்பு இன்ஜின் பகுதிக்குள் சுருண்டு படுத்துக்கொண்டது. அதனால், டீக்கடையில் இருந்து வெந்நீரை வாங்கி வந்து பெட்ரோல் டேங்கின் மேலாக ஊற்றினார்கள். அதில் பாம்பு இறந்துவிட்டது. அதன் பின்னரே பாம்பை வெளியே எடுத்துள்ளனர்.

6 அடி நீளம் கொண்ட அந்தப் பாம்பு விஷம் நிறைந்த கட்டுவிரியன் வகையைச் சார்ந்தது. டீ குடிக்க பைக்கை நிறுத்தியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்