காய்ச்சலால் அவதிப்பட்ட கணவரை கவனித்த மனைவிக்கு நேர்ந்த துயரம்

Report Print Arbin Arbin in இந்தியா

காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணவரை அருகில் இருந்து கவனித்த மனைவி, காய்ச்சலால் சிகிச்சைப் பலனின்றி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அருகே தண்டாலம் பகுதியை சேர்ந்த 37 வயது முனியம்மாள் என்பவரே காய்ச்சலால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தவர்.

கடந்த சில தினங்களாக முனியம்மாளின் கணவர் செல்வம் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் செல்வம் சேர்க்கப்பட்டார். அப்போது, அவரை அருகில் இருந்து கவனித்துவந்தார் முனியம்மாள்.

இந்த நிலையில், முனியம்மாளும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். உடனே, அவரை அதே மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், அவரின் உடல்நலம் நாளுக்கு நாள் மோசமானது. சிகிச்சைப் பலனின்றி முனியம்மாள் நேற்று பரிதாபமாக இறந்தார்.

ஆனால், அவரின் கணவர் செல்வத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மனைவி முனியம்மாள் இறந்த தகவலைக் கேட்ட செல்வம் கதறி அழுதுள்ளார்.

அதுபோல, முனியம்மாள் இறந்த சம்பவம் அவரின் உறவினர்கள் மட்டுமல்லாமல், மருத்துவமனையிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முனியம்மாள் இறப்புகுறித்து மருத்துவமனையில் விசாரணை நடந்துவருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்