மகளுக்கு ரூ.500 கோடி செலவில் திருமணம் நடத்தியவர் தலைமறைவு: வெளியான காரணம்

Report Print Arbin Arbin in இந்தியா

ரூ.18 கோடி பணத்தை சட்டவிரோதமாகப் பெற்ற வழக்கில் பாஜக முன்னாள் அமைச்சரும், பெல்லாரி சுரங்க அதிபருமான ஜனார்த்தன் ரெட்டி தலைமறைவாகியுள்ளார் என்று கர்நாடக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட நேரத்தில் மக்கள் 2 ஆயிரம் ரூபாய்க்காக மணிக்கணக்கில் ஏடிஎம் வாசலில் நின்று வேதனைப் பட்டனர்.

அந்த காலகட்டத்தில் ஜனார்த்தன் ரெட்டி தனது மகளுக்கு ரூ.500 கோடி செலவில் பிரம்மாண்டமாக திருமணம் நடத்தினார்.

பணத்தை வங்கியில் இருந்து எடுக்கவே மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை மக்களுக்கு விதித்த நிலையில், ஜனார்த்தன் ரெட்டி தனது மகளுக்கு நடத்திய திருமணம் பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருந்தது.

சட்டவிரோதமாக குவாரிகளுக்கு அனுமதி கொடுத்த வழக்கில் கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா இறங்கியபோது, ஜனார்த்தன் ரெட்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட ஜனார்த்தன் ரெட்டி 3 ஆண்டுகள் சிறையில் இருந்து தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில், ஜனார்த்தன் ரெட்டி அமைச்சராக இருந்த காலத்தில் நிதி நிறுவன அதிபரை அமலாகப்பிரிவு விசாரணையில் இருந்து காக்கும் பொருட்டு ரூ.18 கோடி பணத்தை தங்கமாகப் பெற்ற வழக்கில் தேடப்பட்டு வந்தார்.

பெல்லாரி தொகுதியில் மிகவும் வலிமையான மனிதர்களாக வலம் வந்த ரெட்டி சகோதரர்களுக்கு சமீபத்திய இடைத்தேர்தல் முடிவுகள் இடியாக இறங்கின.

பெல்லாரி தொகுதியில் பாஜக படுதோல்வியைச் சந்தித்தது. ஜனார்த்தன் ரெட்டியின் தீவிர ஆதரவாளரான சிறீராமுலுவின் சகோதரி ஜே.சாந்தா இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இதையடுத்து, ரூ.18 கோடி ஊழல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஜனார்த்தன் ரெட்டி திடீரென தலைமறைவாகியுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்