பொதுவெளியில் வைத்து காதலர்களுக்கு அரிவாள் வெட்டு: அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள்

Report Print Vijay Amburore in இந்தியா

கும்பகோணம் அருகே உள்ள பூங்காவில் காதலர்களை மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ள சம்பவம் நடந்துள்ளது.

கும்பகோணம் மாவட்டம் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் பூங்காவில், வழக்கம் போல நேற்று இரவும் அதிகமான பொதுமக்கள் வருகை தந்திருந்தனர்.

அங்கு காதல் ஜோடிகளான திருப்பனந்தாளை சேர்ந்த குருமூர்த்தி என்பவரும் பட்டீஸ்வரத்தை சேர்ந்த ராஜலட்சுமியும் என்ற பெண்ணும் இருந்துள்ளனர்.

அப்போது திடீரென அங்கு வந்த மர்ம கும்பல் இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியுள்ளனர்.

இருவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் பலத்த காயங்களுடன் கிடந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் ராஜலட்சுமிக்கு தலையில் பலத்த காயமடைந்துள்ளதால் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

காதலர்கள் இருவருமே ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஆணவ கொலைக்கு வாய்ப்பில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் தப்பியோடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers