துபாயில் மலர்ந்த காதல்: 10 ஆண்டுகள் கழித்து காதல் மனைவிக்கு கணவரால் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Vijay Amburore in இந்தியா

இராமநாதபுரத்தில் காதல் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு கணவன் தப்பி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக துபாயில் மீன்பிடி வேலை செய்து வந்துள்ளார்.

அப்போது அங்குள்ள சேக் ஒருவரின் வீட்டில் வேலைபார்த்து வந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மும்தாஜ் என்ற பெண்ணை சந்தித்துள்ளார்.

பின்னர் இருவரும் காதலித்து, 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்தகொண்டனர். இருவருக்கும் பிறந்த பெண் குழந்தை நன்கு வளர்ந்ததும், புதுக்குடியிருப்பில் வசித்து வரும் தன்னுடைய பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு முனியசாமி மீண்டும் துபாய்க்கு கிளம்பியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் சொந்த ஊருக்கு திரும்பிய கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு ஏற்பட்ட சண்டையின் போது, மனைவியின் கழுத்தை அறுத்துவிட்டு முனியசாமி தப்பி ஓடியுள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மும்தாஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவாகியுள்ள முனியசாமியையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers