கொடூரமாக கொலை செய்யப்பட்ட ரவுடி: கையோடு இதயத்தை வெட்டி எடுத்து சென்ற பயங்கரம்

Report Print Vijay Amburore in இந்தியா

ஆந்திர மாநிலத்தில் பிரபல ரவுடி கொடூரமாக கொலை செய்யப்பட்டு இதயத்தை கையோடு எடுத்து செல்லப்பட்ட பயங்கரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆந்திர மாநிலம் குர்நூல் பகுதி அருகே உள்ள துங்கபத்ரா நதிக்கரையில் மர்ம நபர் ஒருவரின் சடலம் சிதைக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையயடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், இதயம் வெளியில் எடுக்கப்பட்ட நிலையில், உடல் பாகங்கள் சிதைக்கப்பட்டிருந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து டிஎஸ்பி யுகேந்தர் பாபு கூறுகையில், குர்நூல் பகுதியை சேர்ந்த 40 வயதான சென்னையா என்பவர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு ஏராளமான வழக்குகளில் சிறை சென்று திரும்பியுள்ளார்.

பிரபல ரவுடியான சென்னையா மீது காவல்நிலையங்களிலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சென்னையாவை அவருடைய விரோதிகள் யாரவது தான் கொலை செய்திருக்க வேண்டும் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers