கணவரை விட்டு தனியாக வசித்து வந்த பெண்... ஆபாசமாக வீடியோ எடுத்து ஆப்பு வைத்த வாலிபர்

Report Print Deepthi Deepthi in இந்தியா

மதுரை மாவட்டத்தில் அரசுப்பள்ளி ஆசிரியையை தவறாக பயன்படுத்திய வாலிபரை பொலிசார் தேடி வருகின்றனர்.

ராஜபிரவீன் என்ற வாலிபருக்கு சமூகவலைதளமான பேஸ்புக் மூலமாக அரசு பள்ளி ஆசிரியை ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் அந்த ஆசிரியையிடம் ராஜபிரவீன் நட்பாக பேசி பழகினார்.

இதையடுத்து ராஜபிரவீன் கோவை வந்து ஆசிரியையை சந்தித்து பேசினார். அப்போது ராஜபிரவீனுக்கு ஆசிரியை ரூ.38 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் காசோலைகளை கொடுத்தார். பின்னர் ஆசிரியையை ஓட்டலுக்கு அழைத்து சென்ற ராஜபிரவீன் தண்ணீரில் மயக்க மாத்திரையை கலந்து கொடுத்துள்ளார்.

சிறிது நேரத்தில் ஆசிரியை மயங்கியதும் அறைக்கு அழைத்து சென்று பலவந்தப்படுத்தி உல்லாசம் அனுபவித்துள்ளார். மேலும், ஆசிரியையை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார்.

இந்த வீடியோவை காட்டி மேலும் 3 முறை உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜபிரவீன் ஆசிரியையை திருமணம் செய்ய வேண்டுமானால் ரூ.2 லட்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு ஆசிரியை மறுத்துள்ளார்.

எனினும் ராஜபிரவீன் நைசாக பேசி ஆசிரியையிடம் இருந்து 10 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்தை வாங்கி சென்று தலைமறைவாகியுள்ளார்.

இதுகுறித்து ஆசிரியை சிங்காநல்லூர் பொலிசார் புகார் செய்தார். அதன்பேரில் ராஜபிரவின் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers