என்னை தூக்கில் போடுங்க.... நான் தப்பு பண்ணிட்டேன்: தமிழகத்தை உலுக்கிய சிறுமியின் கொலை வழக்கில் கதறிய சைக்கோ

Report Print Deepthi Deepthi in இந்தியா

சேலம் மாவட்டத்தில 14 வயது சிறுமி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தினேஷ்குமார் என்பவர் அச்சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும், இதற்கு சிறுமி இணங்காத காரணத்தால் சம்பவம் நடைபெற்ற அன்று, சிறுமியின் தலையை துண்டித்து அவரது சாதி பெயரை கூறி இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளார்.

கணவன் சிறுமியை வெட்டி கொன்றது தெரிந்ததும், மனைவி அவரை பைக்கில் உட்கார வைத்து கொண்டு உடனடியாக காவல் நிலையத்தில் நேரடையாக ஒப்படைத்துவிட்டு போனார்.

சிறுமியின் மரணத்துக்கு நியாயம் வேண்டி தமிழக அரசியல் தலைவர்கள் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

தினேஷ்குமார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், தான் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் முனிக்கு காவு கொடுக்க இப்படி கொலை செய்தேன் எனவும் அவர் முன்னுக்குபின் முரணாக வாக்குமூலம் அளித்து வந்துள்ளார்.

இந்த வழக்கில் 15 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

இந்நிலையில், நேற்று தினேஷை மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்த சேலம் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.

பொலிஸ் ஜீப்பில் ஏற்ற போகும்போது, திடீரென தினேஷ் கத்தினார். "சார்.. என்னை கொன்னு போட்டுடுங்க, என்னை தூக்கில் போடுங்க சார், சினிமாவை பார்த்துட்டு நான் ரொம்ப பெரிய தப்பை பண்ணிட்டேன்" என்று அழுது புலம்பினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால், இது அத்தனையும் நடிப்பு என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers