அரசியலில் கமலுடன் கைகோர்க்கும் நடிகர் விஜய்? பரபரப்பு தகவல்

Report Print Raju Raju in இந்தியா

நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் விஜய் ஆகியோர் இணைந்து ஓரணியில் அரசியலில் களமிறங்க வாய்ப்புள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வரும் ஆசையை வெளிப்படுத்திதான் சமீபகாலமாக பேசி வருகிறார். சர்கார் இசை வெளியீட்டு விழா பேச்சு அதில் சேர்ந்தது தான். பழ.கருப்பையாவும் கூட விஜய் அரசியலுக்கு வர ஆசைப்படுவதாகத் தான் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தான், சர்கார் திரைப்படத்திற்கு ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

ஆளும் அரசை தாக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகள் படத்தில் இருப்பதாக அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் சர்க்கார் திரைப்படத்துக்கும், நடிகர் விஜய்க்கும் ஆதரவு தெரிவித்துள்ளார் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன்.

சர்கார் படத்தில் கூட வேட்பாளர்களை தேர்வு செய்ய விஜய் காட்டும் அணுகுமுறையைத் தான் கமல்ஹாசன் தனது மக்கள் நீதிமன்றத்தில் ஏற்கனவே செய்து வருகிறார்.

எனவே, வரும் லோக்சபா தேர்தலுக்குள் அரசியலில் குதிக்க விஜய் முடிவெடுத்தால், அவர் கமல்ஹாசன் கட்சியுடன் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதற்குள்ளாக கட்சியை தயார் செய்வது கடினம் என்பதால், குறைந்தபட்சம் கமலுக்கு ஆதரவாக தேர்தலின் போது விஜய் வாய்ஸ் கொடுக்கவாவது வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers