விஜய் ரசிகர்கள் செய்த அதிர்ச்சி செயல்! அமைச்சர்களுக்கு அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ

Report Print Santhan in இந்தியா

திரைப்பட நடிகர் விஜய் நடித்த சர்கார் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர்களுக்கு, விஜய் ரசிகர்கள் அரிவாளை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்த சர்கார் என்ற திரைப்பட தீபாவளியன்று திரைக்கு வந்தது. இப்படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும், அதிமுக அரசையும் கடுமையாக விமர்சிக்கும் வகையில் இப்படம் இருப்பதாக கூறப்பட்டது.

இதனால் இதை கண்டித்து நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் முருகதாசுக்கு எதிராக அதிமுக அமைச்சர்களும் தொண்டர்களும் போராட்டம் நடத்தினர்.

சர்கார் திரைப்படம் ஓடிய திரையரங்களுக்கு சென்று, அங்கிருந்த விஜய் பட பேனர்களை கிழித்தனர். இதனால் அதிமுகவினர் மீது விஜய் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

இதைத் தொடர்ந்து படத்தில் இருந்த அந்த சர்ச்சைக்குரிய காட்சிகளும் நீக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

படத்தில் நடப்பதை தானே கூறியிருக்கிறார்கள், இதில் என்ன தவறு இருக்கிறது, ஏன் அதை நீக்க வேண்டும் எனவும் விஜய் ரசிகர்கள் ஆவேச குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், விஜய்க்கு எதிராகவும் சர்க்கார் திரைப்படத்துக்கு எதிராகவும் பேசிய அமைச்சர்களையும் அதிமுகவினரையும், அரிவாள்களை காட்டி கொலை மிரட்டல் விடுக்கும் விஜய் ரசிகர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாவதால், உளவுத்துறையினரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers