மல்யுத்த வீராங்கனையின் சவாலை ஏற்ற நடிகைக்கு நேர்ந்த பரிதாபம்! வெளியான வீடியோ

Report Print Kabilan in இந்தியா

ஹிந்தி நடிகை ராக்கி சாவந்த் மல்யுத்த வீராங்கனையின் சவாலை ஏற்று அவருடன் மோதியதில், எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல ஹிந்தி நடிகை ராக்கி சாவந்த், சண்டிகாரில் நடந்த மல்யுத்த போட்டியின் தொடக்க விழாவிற்கு நடனம் ஆட சென்றார். அங்கு நடனமாடிய அவர் பின்னர் பார்வையாளர்களுக்கான இடத்தில் அமர்ந்திருந்தார்.

அப்போது நடைபெற்ற போட்டியில், மல்யுத்த வீராங்கனை ரோபெல் தன்னை எதிர்த்து களமிறங்கிய வீராங்கனையை வீழ்த்தினார். பின்னர், தன்னுடன் மோத பெண்கள் யாராவது தயாராக இருக்கிறீர்களா என்று பார்வையாளர்களை நோக்கி சவால் விடுத்துள்ளார்.

ரோபெலின் சவாலை ஏற்ற ராக்கி சாவந்த், அவருடன் மோத மல்யுத்த மேடைக்கு சென்றார். அப்போது வீராங்கனையின் சவாலை தான் ஏற்பதாகவும், ஆனால் அவர் தன்னைப் போல் நடனமாட வேண்டும் என்றும் கோரினார்.

அதற்கு சம்மதித்த ரோபெல் முதலில் தன்னுடன் மோத வேண்டும் என்று கூறினார். ஒட்டுமொத்த பார்வையாளர்களும், நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் மற்றும் பெண் பொலிசார் அனைவரும் ராக்கி சாவந்திற்கு மல்யுத்தம் தெரியும் என்று நினைத்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனார்.

ஆனால், ஒரே நொடியில் ராக்கியை தலைகீழாக தூக்கி தரையில் வீசியெறிந்தார் ரோபெல். இதனால் ராக்கி மூச்சுபேச்சு இன்றி மயங்கிவிட்டார். அதனைத் தொடர்ந்து உடனடியாக மேடைக்கு வந்த நடுவர், பெண் பொலிசார் ராக்கியை கைதாங்கலாக வெளியே கொண்டு வந்தனர்.

அதன் பின்னர் ஸிராக்பூரில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராக்கிக்கு பலமாக அடிபட்டதில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து நிகழ்ச்சி தெரிவிக்க ஏற்பட்டாளர்கள் மறுத்துவிட்டனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்