டோனி இல்லாதது மிகப்பெரிய இழப்பு: கேப்டன் ரோஹித் சர்மா கவலை

Report Print Vijay Amburore in இந்தியா

இந்திய அணியின் டி20 அணியில் டோனி பங்கேற்காதது மிகப்பெரிய இழப்பு என பொறுப்பு கேப்டன் ரோஹித் சர்மா கவலை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிய, மேற்கிந்திய தீவுகள் அணி மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியது.

சென்னை மைதானத்தில் நேற்று நடைபெற்ற 3வது டி20 போட்டியில், கடைசி பந்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.

டி20 போட்டியில் இந்தியா அறிமுகமான காலத்தில் இருந்து விளையாடி வந்த டோனி, சமீபத்தில் முடிந்த தொடரில் விளையாடாமல் இருந்தது ரசிகர்கள் அனைவரது மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோஹித் சர்மா, டோனி இல்லாமல் இருப்பது எந்த ஒரு அணிக்கும் மிகப்பெரிய இழப்பு.

அவர் அணியில் இருப்பது எனக்கு மட்டுமல்ல ஏராளமான வீரர்களுக்கு பூஸ்ட் ஆக இருக்கும். குறிப்பாக இளம் வீரர்களுக்கு’’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்