முகத்தை என் மகள் பார்க்கவில்லை.. மூச்சு இல்லாமல் இருந்த அவரின் கடைசி நிமிடங்கள்: கலங்கும் பிரபல நடிகரின் மனைவி

Report Print Deepthi Deepthi in இந்தியா

கடந்த வாரம் சின்னத்திரை நடிகர் விஜயராஜன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இவருக்கு திருமணமாகி ஒரு மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். தன் கணவரின் இறுதி நிமிடங்கள் மற்றும் அவர் நினைவுகளை கண்ணீருடன் பகிர்ந்துள்ளார் விஜயராஜனின் மனைவி ராமலட்சுமி.

2008 ஆம் ஆண்டு நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு சென்னைக்கு குடிபெயர்ந்தோம்.

மெட்டி ஒலி', `நாதஸ்வரம்'னு சில சீரியல்கள்லயும், `எம் மகன்', `வேலைக்காரன்'னு சில படங்கள்லயும் அவர் நடிச்சார். வாய்ப்புத்தேடி, நீண்ட வருடங்களாகத் தொடர்ந்து அழைச்சுகிட்டே இருந்தார். ஆனாலும், அவருக்குச் சரியான வாய்ப்புகள் வராததால, ரொம்பவே மன வருத்தத்தில் இருந்தார்.

இதனால், பொருளாதார ரீதியாக நாங்கள் மிகவும் பாதிப்படைந்தோம். நடிப்புத் துறையில இருந்து வெளிய வந்திடுங்க என்று அவர்கிட்ட பலமுறை சொல்வேன்.

நான் வாழ்ந்தாலும், செத்தாலும் நடிப்புத்துறையிலதான் இருப்பேன் என்று சொன்னார். தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்பாகவே பழநிக்குக் கிளம்பிவிட்டார். நான் தீபாவளிக்கு முந்தின சனிக்கிழமை சென்னையில இருந்து பழனிக்குக் கிளம்பினேன்.

நீ வந்த பிறகு உன்னையும் குழந்தையையும் பார்த்தப் பிறகுதான் தூங்குவேன்னு சொன்னார். இந்நிலையில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு எனது மாமனார் வீட்டார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தபோதே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டனர்.

நானும் குழந்தையும் இரவு 1 மணி வாக்கில் பழநி வந்தோம். வீட்டுல ஒரே அழுகைச் சத்தம். பண்டிகை உற்சாகத்தில் மகிழ்ச்சியா வரவேற்பாங்கனு நினைச்சா, குடும்பத்தினர் எல்லோரும் அழுகையுடன் என்னை வரவேற்றப்போ எனக்கு ஒண்ணுமே புரியலை.

என்னைப் பார்த்த பிறகுதான் தூங்குவேன்னு சொன்ன என் கணவர், பேச்சு மூச்சில்லாம சடலமாக இருந்தார். அந்த நிமிடங்களை என்னால் வரவேற்க முடியவில்லை.

மகள் ஐஸ்வர்யா, அப்பா மேல அளவுகடந்த அன்பு வெச்சிருக்கா. அவர் இறந்துட்டார்ங்கிறதைப் பொண்ணு இன்னும் உணரவில்லை, அவரோட இறுதிச்சடங்கு நடக்கும்போதுகூட, அவர் பூத உடல் பக்கத்துலகூட பொண்ணு வரலை. கடைசியா அப்பாவின் முகத்தையும் அவள் பார்க்கவில்லை.

அவர் இல்லாததால், சென்னையை விட்டு பழனிக்கே வந்துவிடப்போகிறோம். நான் எனது மகளை எப்படி வளர்த்தெடுக்கப்போகிறேன் என்பதை நினைக்கவே எனக்கு வேதனையாக உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்