பேரறிவாளனுக்கு வாழ்த்து சொன்ன ரஜினி....எந்த 7 பேர் என்று எப்படி கேட்டார்?

Report Print Deepthi Deepthi in இந்தியா

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 தமிழர்களின் விடுதலை குறித்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு ரஜினியின் பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை குடியரசு தலைவரிடமே கொண்டு செல்லாமல், மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக கூறப்பட்டது குறித்து உங்கள் கருத்து என்ன? என்ற கேள்விக்கு, எந்த 7 பேர்? என்று ரஜினி கேட்க, ராஜீவ்காந்தி கொலையாளிகள் என்று நிருபர்கள் விளக்கியதும், ‘அது குறித்து எனக்கு எதுவும் தெரியாது’ என்று ரஜினி பதில் கூறியுள்ளார்.

பேரறிவாளன் பரோலில் வந்திருந்தபோது அவரிடம், தொலைபேசியில் பேசி, விரைவில் நீங்கள் விடுதலை ஆவீர்கள் என்று ஆறுதல் கூறிய ரஜினி எப்படி ஏழு பேர் விடுதலை குறித்து எதுவும் தெரியாது என்று சொல்லுவார் என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஏழு பேர் விடுதலை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று ரஜினிகாந்த் கூறியதற்கு நடிகர் பார்த்திபன் உள்ளிட்ட பலரும் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers